×

பெண்கள் அவசர காலத்தில் தற்காத்து கொள்வது எப்படி? மகளிர், சிறுமிகளுக்கு திசா போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

*100 பேரின் செல்போன் எண்கள் திசா ஆப்பில் பதிவு

திருப்பதி : பெண்கள் அவசர காலத்தில் தங்களை தற்காத்து கொள்வது எப்படி என்று மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு திசா போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தினர். இதில் 100 பேரின் செல்போன் எண்களை திசா ஆப்பில் பதிவு செய்யப்பட்டது. திருப்பதி மாவட்ட காவல்துறை சார்பில் திசா செயலி பதிவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தற்போதைய சமூகத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து திசா காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். திருப்பதி எஸ்பி பரமேஸ்வர் உத்தரவின் பேரில், திஷா காவல் துறையினர் இன்றைய சமுதாயத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

திருப்பதி வெங்கடேஸ்வரா கல்லூரி அருகே திசா பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதேபோல் திருப்பதி பல்கலைக்கழக சாலையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி மாணவிகளுக்கு செல்போனில் பிளே ஸ்டோர் ஆப்பில் உள்ளே சென்று திசா ஆப்பை டவுன்லோடு செய்து, அதில் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் தங்களது செல்போன் அனைத்து கட்டுப்பாட்டு அறைகளுக்கும் பதிவு ஆகிவிடும்.

மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அந்த ஆப்பின் மூலம் தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. தற்போது மகளிர் மற்றும் சிறுவர்கள் உட்பட 100 பேருக்கு இந்த திஷா செயலி ஆப் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் காவல்துறையினர் கூறியதாவது: திசா சட்டம், ராகிங், ஈவ் டீசிங், பெண்களுக்கு எதிரான குற்றம், சைபர் கிரைம், பணியிடத்தில் பெண்களை துன்புறுத்துதல், கடன் வழங்கும் பயன்பாடுகள் போன்றவை கல்லூரிகள் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் விரிவான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இணையம் மற்றும் முகநூல் மூலம் தொடர்பு கொள்பவர்களிடம் இளைஞர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், நன்னடத்தையுடன் நடந்து கொள்ளவும், தேவையற்ற காட்சிகளில் பங்கேற்காமல், சமூகத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் உயர்ந்த நிலைக்கு அடைய இளைஞர்கள் லட்சியத்தோடு செயல்பட வேண்டும் என்றனர்.

The post பெண்கள் அவசர காலத்தில் தற்காத்து கொள்வது எப்படி? மகளிர், சிறுமிகளுக்கு திசா போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Disa ,
× RELATED பழநி கோயிலில் பாதயாத்திரை...